உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு - 2013, இலண்டன்


கலாநிதி வண.தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டில்

ஆய்வுக் கட்டுரைகள்

ஒருவர் தாம் மேற்கொண்டிருக்கும் ஆய்வு தொடர்பான விடயங்கள், அடைவுகள் என்பன கொண்ட ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க முடியும். கட்டுரை சமர்ப்பிப்பவர் ஆய்வு மாணவராகவோ, கலாநிதிப்பட்டப்பின் ஆய்வாளராகவோ, அல்லது நிறுவனம் சாராத ஆய்வாளராகவோ இருக்கலாம். ஆய்வுக் கட்டுரைகள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம்.

காணொளிகள்

ஒருவர் அல்லது ஒரு குழு தம்முடைய அல்லது அதனது தயாரிப்பில் உருவான குறும்படங்களையோ ஆவணப்படங்களையோ அசைபடங்களையோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள விடயப்பரப்புகளுக்குள் வரக்கூடிய காணொளிகளையோ அனுப்பி வைக்க முடியும்.

பயிலரங்கம்

கொடுக்கப்பட்டுள்ள விடயப்பரப்புக்கள் சார்ந்து அல்லது ஒரு செயல்முறை சார்ந்து ஒருவர் அல்லது ஒரு குழு தம்முடைய அல்லது அதனது பயிலரங்கிற்கான சமர்ப்பிப்புக்களை முன்வைக்க முடியும். ஆத்துடன் கண்காட்சிக்கூடத்தில் தமது பயிலரங்கை நடாத்தமுடியும்.

மென்பொருட் செயலிகள்

கொடுக்கப்பட்டுள்ள விடயப்பரப்புகளுக்குள் வரக்கூடிய மென்பொருள்கள், வேறு செயலிகள் தொடர்பான கோரல்கள் இவ்வகைக்குள் வரும். மென்பொருட்கள் குறிப்பிட்ட ஒரு இயங்கு தளத்திலோ (iOS, Android, Mac OS X, Windows, linux)அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளத்திலோ இயங்க கூடியதாயிருக்கலாம். சமர்ப்பிப்புகள் துறைசார் புலமையாளர்களால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுப் பரவலாக்கப்படும்

கேளொலிகள்

ஒருவர் அல்லது ஒரு குழு தாம் அல்லது அது உருவாக்கிய கொடுக்கப்பட்டுள்ள விடயப்பரப்புக்குள் வரக்கூடியவாறான ஒலிக்கோவையையோ, ஒலி வடிவ வெளிப்பாடுகளையோ அல்லது பாடலையோ அனுப்பி வைக்க முடியும்.

கண்காட்சி

ஒருவரோ, ஒரு குழுவோ அல்லது ஓர் அமைப்போ கொடுக்கப்பட்டுள்ள விடயப்பரப்பு அல்லது பரப்புகள் சார்ந்த கண்காட்சிகளைக் கண்காட்சிக் கூடத்தில் வைக்கமுடியும்

மாநாட்டில் ஓர் அங்கமாகிட

உங்கள் பெயர் *

தொலைபேசி இலக்கம் *

பங்குபற்ற விரும்பும் துறை *

மேலதிக குறிப்பு

 

அங்குரார்ப்பணம்


அழைக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேச்சாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், அழைக்கப்பட்ட கட்டுரை ஆசிரியர்கள், படைப்பாளிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளும் மாநாட்டு அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும்.

ஆய்வரங்கம்


தினமும் ஒன்பது ஆய்வரங்கங்கள் முன்று வேறுபட்ட அரங்குகளில் இடம்பெறும். சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளை கட்டுரையாளர்கள் அல்லது கட்டுரையாளர் சார்பில் வாசிப்போர் வாசிக்கலாம்.

ஊர்வலம்


தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் வெளிப்பாடுகள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளுடனும், தமிழரின் பாரம்பரிய கலை அம்சங்களுடனும், ஊர்வலம் ஆரம்பித்து, இறுதிநாள் நிகழ்வு இடப்பெறும் இடத்தை வந்தடையும்.

நிறைவு நிகழ்வு


தமிழரை அடையாளப்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்ட்ட மைதானமொன்றில், கலை நிகழ்வுகள்,சிறப்பு பேச்சுக்கள், மாநாட்டு மலர் வெளியீடு, கண்காட்சி, பயிலரங்கம் போன்ற அம்சங்கள் அடங்கிய நிகழ்வாக இறுதி நாள் நிகழ்வு இடம்பெறும்.

Footer Column 1

This is a widgetised area. Fill it with content from the Widget Admin area.

Footer Column 2

This is a widgetised area. Fill it with content from the Widget Admin area.

Footer Column 3

This is a widgetised area. Fill it with content from the Widget Admin area.

Footer Column 4

This is a widgetised area. Fill it with content from the Widget Admin area.

உலகத் தமிழியல் ஆய்வு நடுவம்